முதல் முறையாக இணையும் கமல், விஜய், சூர்யா, கார்த்தி.. அதுவும் மாஸ் இயக்குனரின் இயக்கத்தில்

Report

தளபதி 67

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 67 உருவாகவிருக்கிறது. இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையுமா என்று ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள்.

முதல் முறையாக இணையும் கமல், விஜய், சூர்யா, கார்த்தி.. அதுவும் மாஸ் இயக்குனரின் இயக்கத்தில் | Kamal Vijay Suriya Karthi In One Movie

எப்படி விக்ரம் - கைதி இரு திரைப்படங்களும் ஒன்றாக இணைந்ததோ அதே போல் விக்ரம் - கைதி - தளபதி 67 என்று லோகேஷ் கனகராஜ் தன்னுடைய LCU கான்சப்டில் தளபதி 67 படத்தை இணைப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

LCUவில் தளபதி 67 

இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் LCUவில் தளபதி 67 திரைப்படம் இணைந்துவிட்டதாக கைதி, விக்ரம் படத்தில் பிஜாய் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் நரேன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதனால், தற்போது விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.

முதல் முறையாக இணையும் கமல், விஜய், சூர்யா, கார்த்தி.. அதுவும் மாஸ் இயக்குனரின் இயக்கத்தில் | Kamal Vijay Suriya Karthi In One Movie

அதுமட்டுமின்றி LCUவில் தளபதி 67 இணைவதால் கண்டிப்பாக ஒரே படத்தில் விஜய், கமல், சூர்யா, கார்த்தியை காணவும் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் படக்குழுவிடம் இருந்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று..

முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்கும் கமல்.. லோகேஷ் கனகராஜின் வெறித்தனமான சம்பவம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US