மனோபாலாவிடம் பேசாமல் இருந்த கமல்! இது தான் பிரச்சனைக்கு காரணமா
இயக்குனர், காமெடியன், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பல விதமாக பணியாற்றிய நடிகர் மனோபாலா சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையும் இரங்கல் தெரிவித்தது. நடிகர் விஜய் நேரில் வந்து மனோபாலா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பேசாமல் இருந்த கமல்
மனோபாலா இதற்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் தன்னை பாரதிராஜாவிடம் அசிஸ்டன்ட் ஆக சேர்த்துவிட்டது கமல் தான் என கூறி உள்ளார். நான் சாப்பிடும் சாப்பாட்டுக்கு அவர் தான் காரணம் என்றும் நெகிழ்ச்சியாக மனோபாலா பேசி இருந்தார்.
இருப்பினும் தான் கமர்சியல் படங்கள் பக்கம் போய்விட்டேன் என கமல் தன் மீது வருத்தத்தில் இருக்கிறார் என்றும் அப்போது தெரிவித்து இருந்தார்.
எல்லோரிடமும் பேசும் கமல் தன்னிடம் பேசுவதில்லை என சுஹாசினி உள்ளிட்ட பலரிடம் மனோபாலா முறையிட்டு இருக்கிறாராம். மனோபாலா ஒரு இடத்தில் இருக்கிறார் என்றால் கமல் நிச்சயம் அங்கே வரமாட்டார் என சுஹாசினி ஒரு பேட்டியில் தற்போது கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
+2 தேர்வில் நடிகர் போண்டாமணியின் மகள் எடுத்த மார்க்! கல்லூரி படிப்புக்கு உதவிய பிரபலம்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
