பிக் பாஸ் 6 புது ப்ரோமோ! அப்போ பிரச்சனை கன்பார்ம்
பிக் பாஸ் 6
பிக் பாஸ் 6ம் சீசன் வரும் ஞாயிறு மாலை பிரம்மாண்ட தொடக்க விழா உடன் ஆரம்பிக்க இருக்கிறது. போட்டியாளர்களாக 21 பேர் வரப்போகிறார்கள் என்றும் அதில் சிலர் பொதுமக்களும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிபி முத்து, ரோஷ்ணி ஹரிப்ரியன், சத்யா சீரியல் ஆயிஷா, ராஜா ராணி 2 சீரியல் நடிகை ஆயிஷா, ரக்ஷன், காமெடியன் அமுதவாணன், ரவீந்தர், மைனா நந்தினி, பாடகி ராஜலக்ஷ்மி, ஷில்பா மஞ்சுநாத், மதுரை முத்து உள்ளிட்ட பலரது பெயர்கள் தற்போது வெளியாகி இருக்கும் உத்தேச போட்டியாளர்கள் லிஸ்டில் இருக்கிறது.
லேட்டஸ்ட் ப்ரோமோ
இந்நிலையில் தற்போது கமல் இருக்கும் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் கமல் "இந்த வீட்ல ஒவ்வொரு நாளும் திருப்பம்.. நூறு நாட்களும் இருக்கும்" என கூறி இருக்கிறார்.
இவர் சொல்வதை பார்த்தல் பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாளும் பிரச்சனை கண்டிப்பாக இருக்கும் வகையில் தான் போட்டியாளர்கள் வருகிறார்கள் போல என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்த வீட்ல ஒவ்வொரு நாளும் திருப்பம்.. நூறு நாட்களும் இருக்கும்.. ? #BiggBossTamil6 - அக்டோபர் 9 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு.. @ikamalhaasan @preethiIndia @NipponIndia #VijayTelevision pic.twitter.com/SlkQGV13Rf
— Vijay Television (@vijaytelevision) October 4, 2022
ஜெயம் ரவிக்கு போன் செய்த சூப்பர்ஸ்டார் ரஜினி! என்ன கூறினார்