கமல் கார் எல்லாம் கொடுக்கல.. பெண் ஓட்டுனர் ஷர்மிளாவின் அப்பா சொன்ன விஷயம்
ஷர்மிளா
கோவையை சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா கடந்த சில மாதங்களாக இணையத்தில் பாப்புலரான நபராக இருக்கிறார். அவரை சந்திக்க பல பிரபலங்களும் சென்று வந்தனர்.
திமுக எம்பி கனிமொழி ஷர்மிளாவின் பேருந்தில் பயணித்தது தொடர்பாக பேருந்து ஓனர் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஷர்மிளா பணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
கமல் கார் கொடுத்தாரா?
அதற்கு பிறகு ஷர்மிளா குடும்பத்தை அழைத்த கமல் அவருக்கு கார் கிப்ட் ஆக கொடுத்தார் என தகவல் சமீபத்தில் மேலும் வைரல் ஆனது.
ஆனால் தற்போது ஷர்மிளாவின் அப்பா அளித்திருக்கும் பேட்டியில் 'கமல் கார் எல்லாம் கொடுக்கல' என கூறி இருக்கிறார்.
"கமல் கார் எல்லாம் கொடுக்கல. 3 லட்சம் ரூபாய்க்கு மட்டும் செக் கொடுத்து 'கார் வாங்கிக்கம்மா' என கூறினார். அந்த செக் அப்படியே தான் வைத்திருக்கிறேன். அவர் கார் கொடுத்தார், 13 லட்சம் கொடுத்தார் என மீடியாவில் தவறாக செய்திகள் வருகிறது" என ஒரு youtube சேனலுக்கு போனில் அளித்த பேட்டியில் ஷர்மிளாவின் அப்பா கூறி இருக்கிறார்.
7ம் அறிவு படத்தில் அந்த வசனம் வெச்சிருக்க கூடாது.. சூர்யா அப்போவே சொன்னார்: உதயநிதி ஸ்டாலின்