அசல் கோளாறை வெச்சி செஞ்ச கமல்.. ஆனால் அந்த விஷயம் பற்றி கேட்கவே இல்லையே
அசல் கோளாறு
பிக் பாஸ் 6ம் சீசனில் தற்போது அசல் கோளாறு பற்றி தான் சமூக வலைத்தளங்களை அதிகம் மோசமான விமர்சனங்கள் வருகிறது. அதற்கு காரணம் அவர் மற்ற பெண்களிடம் தகாத முறையில் தொடுவது போன்ற வீடியோ க்ளிப்பிங் அதிகம் வைரலாவது தான்.
அவரை நெட்டிசன்கள் மிக மோசமாக விமர்சித்து வந்தாலும் பிக் பாஸ் ஷோவை நடத்தும் கமல் அது பற்றி ஒரு வார்த்தை கூட அவரிடம் இதுவரை கேட்டதில்லை.
விளாசிய கமல்
இன்றைய எபிசோடில் கமல் அசல் கோளாறை கடுமையாக விளாசினார். ஆனால் மேலே சொன்ன காரணத்திற்காக இல்லை. அவர் தனலட்சுமியை பாடிஷேமிங் செய்யும் வகையில் பேசியது, 'நீ யாரு.. நீயெல்லாம் ஒரு ஆளா' என கேட்டது பற்றி தான் கமல் குறிப்பிட்டு அவரை கண்டித்து இருக்கிறார்.
ராப் பாடுவது என்பது வேறு, அதில் (பெண்களை பாடிஷேமிங் செய்தால்) காமெடியாக எடுத்துக்கொள்வார்கள், ஆனால் நிஜத்தில் பேசும்போது அது அப்படி இருக்காது எனவும் கமல் கூறினார்.
அதன் பின் அசல் கோளாறு மற்றும் நிவாஷினி ஆகியோர் ஜோடியாக எப்போதும் சுற்றிக்கொண்டிருப்பது பற்றி மறைமுகமாக கூறி எச்சரிக்க, இது வெறும் friendship மட்டும்தான் என நிவாஷினி விளக்கம் கொடுத்தார்.
கமல் இத்தனை கேள்விகள் கேட்டாலும், அவர் மற்ற பெண்களை தொடுவது பற்றி எந்த கேள்வியும் எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து வெளியிட்ட வீடியோ! முதல் வேலையாக இதை தான் செய்திருக்கிறார்