முன்னணி இயக்குநருடன் இணையும் கார்த்திக்.. முதல் முறையாக சேரும் கூட்டணி
கார்த்தி
கடந்த ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளிவந்த மெய்யழகன் திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் வா வாத்தியார், சர்தார் 2, டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ஒரு படம் என தொடர்ந்து தரமான இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இப்படங்களுக்கு பின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கைதி 2 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில், கார்த்தியின் புதிய திரைப்படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
முதல் முறையாக சேரும் கூட்டணி
அதன்படி, இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளாராம். இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் dominic and the ladies purse. இப்படத்தை தொடர்ந்து ரவி மோகனுடன் கவுதம் மேனன் இணைந்து படம் பண்ணப்போவதாக கூறப்பட்டது.
ஆனால், தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் தகவலின்படி, கார்த்தியுடன் சேர்ந்து படம் பண்ணபோகிறார் என சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.