சூர்யாவின் முக்கிய திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த நடிகர் கார்த்தி! எந்த திரைப்படத்தில் தெரியுமா?
கார்த்தி
தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி. தொடர் வெற்றி திரைப்படங்களால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாகி வைத்துள்ளார்.
மேலும் கார்த்தி நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் விருமன். கொம்பன் திரைப்படத்திற்கு இரண்டாவது முறையாக இணைந்துள்ள கூட்டணி மீண்டும் வெற்றி திரைப்படத்தை கொடுத்துள்ளது.
விருமன் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தியின் முக்கிய திரைப்படங்களான பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
சூர்யாவின் திரைப்படத்தில் கார்த்தி
இந்நிலையில் நடிகர் கார்த்தி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதன்படி சூர்யா, சித்தார்த், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அயுத எழுத்து.
பெரிய வெற்றியடைந்த இப்படத்தில் நடிகர் கார்த்தியும் நடித்திருக்க வேண்டியதாம். ஆம், சித்தார்த் நடித்த அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்க கார்த்தியை கேட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம். ஆனால் கார்த்தி உதவி இயக்குநராகவே வந்ததாகவும் நடிப்பதில் ஆர்வம் இல்லை என்றும் கூறிவிட்டாராம்.
படுதோல்வி அடைந்த பாபா! விநியோகஸ்தர்களை அழைத்து ரஜினி செய்த விஷயம்

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
