டாடா படத்தின் மாபெரும் வெற்றி.. கமல் ஹாசன் படத்தில் ஹீரோவாகும் கவின்..
டாடா
சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் டாடா.
கவின் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை அடைந்துள்ள இப்படம் கவின் திரை வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

ஆம், டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கமல் - கவின்
டாடா படத்தை பார்த்துவிட்டு அப்படத்தின் குழுவினர் அனைவரையும் அழைத்து கமல் பாராட்டியிருந்தார்.

இந்த சந்திப்பின் போது தான் கவினை தன்னுடைய தயாரிப்பில் நடிக்க வைக்க கமல் முடிவெடுத்துள்ளார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
அதிக லாபம் கொடுத்தது எது? வாரிசு-சா துணிவு-வா