3 வார Kgf 2 படத்தின் சென்னை வசூல் விவரம்
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிக்க கன்னட சினிமாவில் தயாராகி இப்போது உலகம் முழுவதும் கலக்கி கொண்டிருக்கிறது KGF 2 திரைப்படம்.
இதில் படத்தின் கதை என எல்லாவற்றையும் தாண்டி ஒரு ரசிகனை இப்படத்திற்கு எடிட் செய்ய வைத்தது படக்குழுவின் பெரிய விஷயமான பார்க்கப்படுகிறது.
படத்திற்கான வெற்றியை படக்குழு பெரிய அளவில் கொண்டாடிவிட்டார்கள்.

படம் செய்த சாதனை
பாகுபலி படத்தை அடுத்து ரூ. 1000 கோடி வசூலித்த தென்னிந்திய படமாக KGF 2 உள்ளது. பாலிவுட்டிலும் அமீர்கானின் வாழ்நாள் சாதனை படமான தங்கல் பட வசூலையும் இப்படம் முறியடித்துள்ளது.
பாலிவுட் படங்களில் அதிக வசூலித்த படங்கள் லிஸ்டில் இப்படத்தின் ஹிந்தி பதிப்பு 2ம் இடத்தை பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் படம் ரூ. 100 கோடி வசூலித்து அஜித், விஜய் படங்களின் ரூ. 100 கோடி வசூல் சாதனை படங்களின் லிஸ்டில் KGF 2 இணைந்துவிட்டது.
தற்போது இப்படம் 3 வார முடிவில் சென்னையில் இதுவரை ரூ. 9.46 கோடி வரை வசூலித்துள்ளதாம், இந்த வார இறுதியில் படம் ரூ. 10 கோடியை எட்டிவிடும் என்கின்றனர்.
நடிகை ரோஜாவின் பிரம்மாணட வீட்டை பார்த்துள்ளீர்களா?- அவர் கட்டியுள்ள புதிய வீடு