கே.ஜி.எப் மற்றும் கே.ஜி.எப் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த முக்கிய நடிகருக்கு ஏற்ப்பட்ட விபத்து!
விபத்தில் சிக்கிய நடிகர்
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் கே.ஜி.எப் மற்றும் கே.ஜி.எப் 2.
பிரம்மாண்ட வெற்றியடைந்த இந்த திரைப்படங்களிலும் நடித்து மக்களிடையே பிரபலமானவர்கள் அதிகம். அப்படி இப்படங்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகர் பி.எஸ்.அவினாஷ்.
இப்படங்களுக்கு அதிக திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கே.ஜி.எப் திரைப்படம் மூலம் தான் இவர் அதிக பிரபலம் ஆகியுள்ளார். இதனிடையே அவினாஷ் கடந்த புதன்கிழமை அன்று காலை பெங்களூரில் கார் விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளார்.
மேலும் வழக்கமாக ஜிம்மிற்கு செல்லும்போது, வழியில் வந்த டிரக் மீது அவரின் கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் எந்தவித காயமின்றி தப்பித்துள்ளார்.
இதனிடையே தனக்கு நடந்த விபத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவினாஷ், தன்மீது அக்கறைக் காட்டிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அவினாஷ்.
பவர் ஸ்டார் பவன் கல்யாணை நேரில் சந்தித்துள்ள நடிகர் கார்த்தி- வெளிவந்த வீடியோ

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
