KGF யாஷ் ராமாயணம் படத்தில் நடிக்க வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா..
KGF யாஷ்
ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் KGF. 2019ல் வெளிவந்த இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் அளவில் வெற்றியடைந்ததை தொடர்ந்து, 2022ல் KGF 2 வெளிவந்தது.
உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து, மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. மேலும் KGF 3 படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
KGF படங்களை தொடர்ந்து யாஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டாக்சிக். இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ராமாயணா
பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ராமாயணா. இயக்குனர் நிதிஷ் டிவாரி இயக்கும் இப்படத்தில் ரன்பிர் கபூர் ராமராக நடிக்க, சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் KGF யாஷ் இப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தில் நடிப்பதற்காக, ஒரு பாகத்திற்கு ரூ. 50 கோடி என்கிற கணக்கில், மூன்று பாகங்களுக்கு ரூ. 150 கோடி சம்பளமாக யாஷ் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
