பீஸ்ட், RRR படங்களை வீழ்த்தி முக்கிய விஷயத்தில் சாதனை செய்த KGF 2- கலக்கும் ராக்கி பாய்
தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்களான விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படங்கள் வெளியாகி இருந்தன.
இதில் அஜித்தின் வலிமை நல்ல வசூல் வேட்டை நடத்த எதற்கும் துணிந்தவன் மற்றும் பீஸ்ட் படங்கள் வசூலில் கொஞ்சம் சொதப்பின.
பீஸ்ட் பட ரிலிஸ் நேரத்தில் தமிழில் டப செய்யப்பட்டு வெளியான KGF 2 மாஸ் வசூல் வேட்டை நடத்தியது, ரிலீஸ் ஆன சில நாட்களிலேயே படம் ரூ. 1000 கோடி வரை உலகம் முழுவதும் வசூலித்தது.
புக் மை ஷோவில் கலக்கிய படம்
எல்லா படங்களின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் முக்கிய பங்கு வகிக்கிறது புக் மை ஷோ. இவர்கள் ஒவ்வொரு படங்கள் எவ்வளவு சதவீதம் டிக்கெட் புக்கிங் ஆனது என்ற விவரத்தை வெளியிடுவது வழக்கம்.
அப்படி அவர்கள் மார்ச் முதல் மே வரை ரிலீஸ் ஆன படங்களின் டாப் இடம் பிடித்த படங்களின் புக்கிங் விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
இதிலும் எல்லா படங்களை தாண்டி முதல் இடத்தில் இருக்கிறது யஷ் நடித்த KGF 2.
- KGF 2- 17.1 மில்லியன்
- RRR- 13.4 மில்லியன்
- பீஸ்ட்- 2.67 மில்லியன்
கடைசியில் நாயுடன் தான் சாகப்போகிறார் சமந்தா- ரசிகரின் கமெண்டிற்கு நடிகை பதிலடி