தமிழகத்தை முற்றிலுமாக கைப்பற்றிய ராக்கி பாய்- வலிமை மற்றும் பீஸ்ட் படத்தை தோற்கடித்த KGF 2
தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்களை தாண்டி மற்ற மொழி படங்கள் அதிக வசூல் வேட்டை நடத்தி வருகின்றன. அப்படி இந்த வருட ஆரம்பத்தில் ரிலீஸ் ஆன மற்ற மொழி படங்கள் தான் இப்போது தமிழக பாக்ஸ் ஆபிஸை கலக்குகின்றன.
புஷ்பா, RRR, KGF 2 போன்ற படங்கள் இந்த வருடம் வெளியான மற்ற மொழி படங்கள்.
வலிமை, பீஸ்ட் Vs KGF 2
தமிழ சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய்-அஜித்தின் பீஸ்ட் மற்றும் வலிமை படங்களும் ரிலீஸ் ஆகி இருந்தது. இந்த படங்கள் ஓரளவிற்கு வசூல் வேட்டை நடத்தினாலும் மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸை நெருங்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
தற்போது என்ன தகவல் என்றால் விஜய்யின் பீஸ்ட் மற்றும் அஜித்தின் வலிமை படங்களை விட கன்னட சினிமாவில் தயாராகி வெளியான யஷ் நடித்த KGF 2 படம் தான் இந்த வருடம் வெளியான படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூலித்த படமாம்.
இப்படம் தமிழக பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தில் உள்ளது.
தமிழகத்தையும் சுற்றிவலைத்த யஷ் KGF 2 படத்தை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ரிலீஸிற்கு முன்பே கமல்ஹாசனின் விக்ரம் படம் இவ்வளவு வசூலித்துள்ளதா?- செம கலெக்ஷன்

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
