Kgf 2 படம் மூலம் கன்னட சினிமா நடிகர்களில் யஷ் மட்டுமே செய்த சாதனை- அதுவும் தமிழ்நாட்டில் தான்
Kgf 2 கடந்த சில வாரங்களாக இந்திய சினிமா ரசிகர்கள் கூறிக்கொண்டே இருக்கும் ஒரு திரைப்படம். ஒரு கேங்ஸ்டர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா என சினிமா வட்டாரங்களில் பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.
இப்படி ஒரு கேங்ஸ்டர் படங்கள் மற்ற மொழிகளில் இல்லையா என்றால் அப்படி ஒன்றும் இல்லை, ஆனால் இந்த நேரத்தில் Kgf 2 படத்திற்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு கிடைத்துள்ளது.

படத்தின் வசூல்
ஏப்ரல் 14ம் தேதி வெளியான இத்திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 1000 கோடியை தாண்டிவிட்டது. ஹிந்தி பதிப்பில் அமீர்கானின் வாழ்நாள் சாதனை படமான தங்கல் பட வசூலை முறியடித்து இப்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் நேற்றைய வசூலோடு சேர்த்து ரூ. 100 கோடியை எட்டிவிட்டது. இது யஷ் செய்துள்ள பெரிய சாதனை, இதுவரை எந்த கன்னட நடிகரின் படமும் தமிழகத்தில் ரூ. 100 கோடியை வசூலித்தது இல்லை.
இன்னும் 2, 3 தினங்களில் இப்படம் சென்னையில் ரூ. 10 கோடியை எட்டிவிடும் என்கின்றனர்.
AK 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாகும் 43 வயது நடிகை ! யார் தெரியுமா?
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri