Siu-Lung Leung
90ஸ் கிட்ஸ் மனதில் இடம்பிடித்த வெளிநாட்டு திரைப்படங்களில் ஒன்று Kung Fu Hustle. உலக புகழ்பெற்ற நடிகர் Stephen Chow இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

இப்படத்தில் தி பீஸ்ட் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் Siu-Lung Leung.

இவர் The Legendary Fok, Call Me Dragon போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், Kung Fu Hustle படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் உலகளவில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
காலமானார்
இந்நிலையில், 77 வயதாகும் நடிகர் Siu-Lung Leung கடந்த ஜனவரி 14ஆம் தேதி காலமானார். இவருடைய மரணம் பெரும் துயரத்தை ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் கொடுத்துள்ளது. ரசிகர்கள் தங்களது இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
