கடுமையாக விமர்சிக்கப்பட்ட குருவி திரைப்படத்தின் உண்மையான வசூல் குறித்து உதயநிதி ஸ்டாலின் சொன்ன தகவல்
குருவி
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் தரணி இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் குருவி.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக முதல்முறையாக தயாரிப்பில் இறங்கினார்.
அப்படியான இப்படம் வெளியான போது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது, மேலும் தற்போது வரையில் அப்படத்தின் காட்சிகள் குறித்தும் வசூல் குறித்து விமர்சிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் குருவி திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார். அதில் நான் விஜய் சாரை வைத்து முதலில் தயாரித்த திரைப்படம் குருவி.
பலரும் அப்படம் சரியாக போகவில்லை என சொல்வார்கள், ஆனால் அப்போது விஜய் சாரின் சம்பளம், படத்தின் பட்ஜெட் எல்லாம் வைத்து பார்க்கையில் வசூல் ரீதியாக அப்படம் வெற்றி திரைப்படம் தான் என தெரிவித்து இருக்கிறார்.

ஒரே வருடத்தில் தாய், தந்தை, அண்ணன் என குடும்பத்தின் முக்கிய நபர்களை இழந்த நடிகர் மகேஷ் பாபு
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri