வசூலில் தடுமாறும் லால் சலாம்.. இவ்ளோ தான் வசூலா?
லால் சலாம்
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் கடந்த 9 -ம் தேதி வெளியானது. இந்த படத்தில் முக்கியமான ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
வசூல்
பிரமாண்டமாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர். ரஜினியின் சொந்த ஊரான கர்நாடகவில் இப்படம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது என்றும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்நிலையில் லால் சலாம் திரைப்படம் வெளியாகி 9 நாட்களில் உலக அளவில் வெறும் ரூபாய் 27 கோடி தான் வசூல் செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சுவர்களில் ஜேர்மன் வாசகம்., வீட்டிற்கு அடியில் ரகசிய பதுங்குகுழியை கண்டுபிடித்த பிரித்தானிய தம்பதி News Lankasri

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan
