லெஜண்ட் சரவணனை தொடர்ந்து இவரும் ஹீரோவாக வருகிறாரா? அவரே சொன்ன பதில்
தனது கடையின் விளம்பரங்களில் நடித்து அதன் மூலமாக பாப்புலர் ஆனவர் லெஜண்ட் சரவணன். அவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.
லெஜண்ட்
லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்து இருக்கும் தி லெஜண்ட் படம் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சென்ற வாரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை அது பெற்று இருக்கிறது.
இவரை போலவே ஒரு பிரபல நகைக்கடை உரிமையாளரான கிரண் குமாரும் தனது கடையின் விளம்பரங்களில் நடித்து வருகிறார். அவருக்கும் இணையத்தில் அதிகம் பாப்புலாரிட்டி இருக்கிறது. சிவாஜி ரஜினி கெட்டப் போல அவர் அவரது தோற்றம் இருக்கிறது என ஒப்பீடு இருந்து கொண்டிருக்கும்.

சினிமாவில் நடிப்பாரா?
அவருக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறதா என சமீபத்தில் அவரிடமே பேட்டியில் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் "அந்த ஆசை சுத்தமாக இல்லை, என்னால் டான்ஸ் எல்லாம் ஆட முடியாது. இப்போது இருக்கும் இடமே போதும்" என கூறி இருக்கிறார்.
அதனால் அவர் சினிமாவிற்குள் வர வாய்ப்பில்லை என உறுதியாகி இருக்கிறது.
விமர்சனங்களை கண்டு கொள்ளாத தி லெஜண்ட் சரவணன் ! சமுக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு.