புதியதாக வந்த தனி ஓருவன் 2 படத்தின் அப்டேட்... பாலிவுட் நடிகரை களமிறக்கும் இயக்குனர், இது வேறலெவல் ஆச்சே
தனி ஒருவன்
கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான ஒரு திரைப்படம் தனி ஒருவன்.
ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது, ஆனால் இன்னொரு பிரபலத்திற்கு வாழ்க்கையிலேயே முக்கிய படமாக அமைந்தது. அவர் வேறுயாரும் இல்லை இயக்குனர் மோகன் ராஜாவிற்கு தான்.
இதற்கு முன் நிறைய படங்கள் இயக்கினாலும் ரீமேக் பட இயக்குனர் என்று தான் பெயர் பெற்றார்.
அந்த பெயரை உடைக்க ஒரு ஹிட் படமாக அமைந்தது தனி ஒருவன். சித்தார்த் அபிமன்யு என்ற மாஸ் ப்ளஸ் கிளாஸ் வில்லனை வைத்து சூப்பராக படத்தை இயக்கியிருப்பார்.

2ம் பாகம்
தனி ஒருவன் மிகப்பெரிய வெற்றியடைய 2ம் பாகம் எப்போது எப்போது என கேட்ட ரசிகர்களுக்கு விரைவில் என்றும் கூறியிருந்தார் மோகன் ராஜா.
ஜெயம் ரவி கூட ஒரு பேட்டியில், 2ம் பாகத்திற்கான முக்கிய கருவை பிடித்துவிட்டார் என கூறியிருந்தார். இப்போது படத்தை பற்றி லேட்டஸ்ட் தகவல் வந்துள்ளது.
அதாவது இரண்டாவது பாகத்தில் மாஸ் வில்லனாக பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய படத்தில் மித்ரனை தேடி வில்லன் வருவாராம்.

லண்டனில் பிடிப்பட்டார் தண்டனை குற்றவாளி ஹதுஷ் கேபது: 2 நாளுக்கு பிறகு தேடுதல் வேட்டை நிறைவு News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri