லோகேஷின் LCU குறும்படம்!! OTT ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடியா?
லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் சென்சேஷனல் இயக்குனராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ்.
ஹாலிவுட்களில் மார்வெல் யூனிவெர்ஸ், DC யூனிவெர்ஸ் இருப்பது நமக்கு தெரியும். ஆனால் இந்திய சினிமாவில் அப்படி எதுவும் இல்லை. ஆனால் இந்த நிலைமையை மாற்றியவர் தான் லோகேஷ் கனகராஜ்.
LCU கான்சப்டில் அடுத்த வர இருக்கும் படம் கைதி 2. இந்த படத்தை தலைவர் 171 படத்திற்கு பின் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OTT ரைட்ஸ்
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நரேன், கைதி 2 படத்திற்கு முன்பு 10 நிமிடத்திற்கு குறும்படம் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். அந்த படம் LCU வின் தொடக்கமாக இருக்கும் என்று நரேன் கூறினார்.
இந்நிலையில் அந்த குறும்படத்தை 3 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    