மீண்டும் விஜய்க்கு வரும் தலைவலி! அடிவாங்குமா லியோ படத்தின் வசூல்
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படம் சோலோவாக ரிலீசாகி இருந்தால் கண்டிப்பாக எதிர்பாக்காத பாக்ஸ் ஆபிஸ் வசூல் தயாரிப்பாளருக்கு கிடைத்திருக்கும்.
ஆனால், துணிவு படத்துடன் வெளிவந்ததால், இரு திரைப்படங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் வாரிசு படத்தின் வசூல் அடிவாங்கியது. விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் லியோ.
இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகிறது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
மீண்டுமா
இந்நிலையில் அக்டோபர் மாதம் வெளிவரும் லியோ படத்தை தொடர்ந்து அடுத்த இரு வாரங்களில் கமல் ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகிறதாம்.
அதே போல் அட்லீயின் ஜவான் திரைப்படமும் அக்டோபர் மாதம் வெளிவருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மீண்டும் கண்டிப்பாக விஜய் படத்தின் வசூல் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு என தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று..
பல கோடி லாபம் கொடுத்த ஹீரோவுக்கு ஜோடியாகும் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்.. சூப்பர் ஜோடி

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
