சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன், கெட்டவார்த்தையால் திட்டுனாங்க.. இயக்குனர் லிங்குசாமி வேதனை
லிங்குசாமி
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் லிங்குசாமி. இவர் 2001 -ம் ஆண்டு வெளியான ஆனந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை அடுத்து பல சூப்பர் ஹிட் படங்களையும் கொடுத்து இருக்கிறார்.
வேதனை
சமீபத்தில் பேட்டி பங்கேற்ற பிரபல இயக்குனர் லிங்குசாமி, "வெற்றியோ தோல்வியோ இரண்டையும் நான் சமமாகத்தான் பார்ப்பேன். ஏன் என்றால் சென்னைக்கு வந்த புதிதில் பத்துக்கு பத்து ரூமில், சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருந்தேன். அதுமட்டுமின்றி இட்லி கடையில் கடன் வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன்"
"அஞ்சான் படம் வெளியான பிறகு என் மீது மோசமான விமர்சனங்கள் முன் வைத்தனர். பலரும் என்னை கடுமையாக திட்டினார்கள். ஆனால் அதையெல்லாம் நாம் கடந்து போய் கொண்டே இருக்க வேண்டும் எங்கேயும் தேங்கி நிற்கக்கூடாது".
"இப்படி இருக்காத எதாவது படம் பண்ணு" என்று சொல்லும் வெற்றிமாறன். "உரிமையோடு படம் எடு பார்த்துக்கலாம்" என்று சொல்லும் விஷால் போன்ற நண்பர்கள் என்னோடு இருக்கும் போது இன்னும் எனக்கு என்ன வேண்டும என்று லிங்கு சாமி கூறியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
