ரஜினி மற்றும் லோகேஷ் சந்திப்பின் பின்னணி ! என்ன சொன்னார் தெரியுமா?
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.
டாப் நட்சத்திரங்கள் இணைந்து கமலுடன் நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக கமல் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார்.
இதனிடையே நேற்று திடீரென ரஜினி மற்றும் லோகேஷ் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. மேலும் விக்ரம் படத்திற்கு ரஜினி வாழ்த்து சொன்னதாகவும் தகவல் பரவின.
இந்நிலையில் தற்போது லோகேஷ் அந்த சந்திப்பு குறித்து பேசியுள்ளார். அதில் " விக்ரம் தொடங்கியதற்கு முன் மற்றும் அப்படம் முடித்த பின் ரஜினி சாரை சந்தித்தேன்.
ரஜினி சார் படத்தை பார்க்க ரொம்ப ஆர்வமாக உள்ளார், மேலும் கமலுடனான அவரின் நட்பு குறித்து அவர் பேசியிருந்தார்" என லோகேஷ் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து வாழ்த்திய ரஜினிகாந்த்- எதற்கான தெரியுமா?