கவுதம் மேனனுக்கு தம் அடிக்க சொல்லிக்கொடுத்ததே நான் தான்.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்
லோகேஷ் கனகராஜ்
தொடர் வெற்றி படங்களை கொடுத்து டாப் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் கவுதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மாத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓபன் டாக்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், லியோ படத்தில் கவுதம் மேனன் தம் அடிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.
அப்போது கவுதம் மேனன் என்னிடம் வந்து, 'எனக்கு தம் அடிக்க தெரியாது' என்று கூறினார். நான் அவருக்கு தம் எப்படி அடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தேன்.
அந்த சமயத்தில் கவுதம் மேனன், 'எப்படி இவ்வளவு பெர்ஃபக்ட்டா அடிக்கிற' என்று கேட்டார். அதற்கு நான், 'எல்லாம் உங்க காக்க காக்க படம் பார்த்து தான் சார்' என்று கூறினேன்.
குத்தாட்டம் போட்ட அதிதி ஷங்கர்.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.. இதோ வீடியோ!

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

மடத்தில் தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்யும் முஸ்லிம் பெண் - என்ன சொன்னார் தெரியுமா? IBC Tamilnadu

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
