உலகளவில் லவ் டுடே திரைப்படம் மொத்தமாக செய்துள்ள வசூல்! எதிர்பார்க்காத வசூல் சாதனை
லவ் டுடே
சமீபத்தில் வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் லவ் டுடே.
பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கியுள்ள லவ் டுடே திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் தற்போது வரையில் லவ் டுடே திரைப்படம் ரூ. 55 கோடி-யை வசூல் செய்திருக்கிறது. மேலும் நாளை இப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில் தற்போது லவ் டுடே திரைப்படம் உலகளவில் மொத்தமாக செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. ஆம், லவ் டுடே திரைப்படம் உலகளவில் கிட்டதட்ட ரூ. 70 கோடி அளவில் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும் நாளை தெலுங்கில் வெளியாகி இப்படம் வரவேற்பை பெற்றால் ரூ. 75 கோடி-யை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு அறிமுக நடிகரின் திரைப்படம் இந்தளவு வசூல் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த முன்னணி நடிகை யார் தெரியுமா