நடிகர் எம்.ஆர்.ராதாவின் நடிப்பில் வெளிவந்த டாப் 5 படங்கள்!! இதோ
எம்.ஆர்.ராதா
தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகராக திகழ்ந்தவர் எம்.ஆர்.ராதா. வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும் மக்கள் மனதில் கொடி கட்டி பறந்தார்.
1937ல் "ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி" என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். சிலப்படங்கள் நடித்தபிறகு திரைத்துறையில் இருந்து சிறிது காலம் விலகி நாடகத்துறையில் பணியாற்றினார்.
இவரின் நாடகத்தில் எந்த ஒரு பிரமாண்ட செட் போடாமல் வெறும் தன்னுடைய நடிப்பு திறமையால் மக்களை கட்டிப்போட்டவர். பட வாய்ப்புகள் பற்றி கவலைப்படாமல் நாடகத்தில் கவனம் செலுத்தினார்.
பன்னிரண்டு வருடங்களுக்கு பின் "ரத்தக்கண்ணீர்" எனும் வெற்றி நாடகத்தை திரைப்படமாக நடித்து திரைத்துறைக்கு திரும்பினார். கதாநாயகனாக நுழைந்து பின் வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.
திராவிட கொள்கைகளை தனது வசனத்தின் மூலம் நடித்துக் காட்டுவதில் வல்லமை வாய்ந்தவர். இதனால் அவருக்கு "நடிகவேல்" என்ற பட்டத்தை பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்கள் வழங்கினார்.
டாப் 5 படங்கள்
இந்நிலையில் எம்.ஆர்.ராதாவின் நடிப்பில் திரைக்கு வந்த டாப் 5 படங்கள் என்னென்ன வென்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..
ரத்தக்கண்ணீர் :
எம்.ஆர்.ராதாவின் நடிப்பில் 1954ம் ஆண்டு திரைக்கு வந்த படம் ரத்தக்கண்ணீர். அவரின் நாடகம் ரத்தக்கண்ணீர் 3,500 முறை மேடை ஏறியது. இதனை படமாக தயாரிக்க இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சுவிற்கு ராதா பல நிபந்தனைகளை போட்டுள்ளார். இப்படத்திற்காக இவர் ரூ.1,25,000 சம்பளம் வாங்கியுள்ளார். இப்படம் திரைக்கு வந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது.
பாகப்பிரிவினை:
1959ம் ஆண்டு சிவாஜியுடன் எம்.ஆர்.ராதா இணைந்து நடித்து திரைக்கு வந்த படம் "பாகப்பிரிவினை". இப்படம் திரைக்கு வந்து மகத்தான வெற்றி பெற்று, எம்.ஆர்.ராதாவின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. மேலும், இத்திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்றுள்ளது.
குடும்ப தலைவன்:
எம்.ஜி.ஆர் மற்றும் எம்.ஆர்.ராதா நடிப்பில் "குடும்ப தலைவன்" திரைப்படம் 1962 ல் வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்று, திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.
[XL22A4 ]
பலே பாண்டியா:
பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் 1962ல் "பலே பாண்டியா" திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா மற்றும் தேவிகா ஆகியோர் நடித்துள்ளனர். நகைச்சுவை கலந்த படத்தில் சிவாஜி மூன்று வித்தியாசமான வேடங்களில், எம்.ஆர். ராதா இரண்டு வேடங்களில் நடித்திருந்தனர். இதில் எம்.ஆர். ராதா மற்றும் சிவாஜியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
நீதிக்குப்பின் பாசம்:
முதலில் சட்டம், அடுத்து பாசம் எனும் கொள்கை கொண்ட குடும்பத்தை பற்றிய கதை தான் நீதிக்குப்பின் பாசம். இப்படம் 15 ஆகஸ்ட் 1963 ல் வெளிவந்து பின் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு "தந்திரி கொடுகுலா சவால்" எனும் பெயரில் வெளியானது.
ஷாருக்கான் மேனேஜர் சம்பளம் இத்தனை கோடியா.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா