ஷாருக்கான் மேனேஜர் சம்பளம் இத்தனை கோடியா.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
ஷாருக்கான்
பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் எனும் அந்தஸ்தில் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பதான் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. உலக அளவில் இப்படம் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து துவண்டு கிடந்த பாலிவுட் திரையுலகை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தது.
இப்படத்தை தொடர்ந்து ஷாருக்கான் நடித்து வரும் திரைப்படம் தான் ஜவான். அட்லீ இயக்கி வரும் இப்படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்காக தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.
ஷாருக்கான் தான் நடிக்க ஒவ்வொரு படத்திற்கும் ரூ. 100 கோடிக்கும் மேல் தான் சம்பளம் வாங்கி வருகிறார்.
ஷாருக்கான் மேனேஜர் சம்பளம்
இந்நிலையில் அவருடைய மேனேஜர் பூஜா வாங்கி வரும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக்கானின் நிழலாக செயல்பட்டு வரும் பூஜா வருடத்திற்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
அவருடைய சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 50 கோடிக்கும் மேல் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. பூஜா கடந்த 11 ஆண்டுகளாக ஷாருக்கானின் மேனேஜராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இப்படி தான் எடுக்க போகிறாரா.. அவரே கூறிய தகவல்