இரண்டு நாட்களில் மாவீரன் படம் செய்துள்ள வசூல் வேட்டை.. எவ்வளவு தெரியுமா
மாவீரன்
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மாவீரன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக அதிதி ஷங்கர் ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் சரிதா, வில்லனாக மிஸ்கின், சுனில், KPY மோனிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பை முதல் நாளில் இருந்து பெற்று வருகிறது.
இரண்டாம் நாள் வசூல்
முதல் நாள் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பிய மாவீரன் திரைப்படம் இரண்டாவது நாளிலும் வசூல் வேட்டையை தொடர்ந்து நடத்தி வருகிறது. ஆம், மாவீரன் திரைப்படம் வெளிவந்து இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ரூ. 25 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இனி வரும் நாட்களில் கண்டிப்பாக இப்படம் புதிய வசூல் சாதனையை பாக்ஸ் ஆபிஸில் படைக்கும் என தெரிவிக்கின்றனர். அதை பொறுத்திருந்து பார்ப்போம்..
ரசிகர்கள் கொண்டாடிய Sound Of Madras! ரோபோ ஷங்கர், மணிகண்டன் உட்பட பங்கேற்ற முன்னணி நட்சத்திரங்கள்
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan