கமல் ஹாசனின் மகாநதி திரைப்படம் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா!
மகாநதி
கமல் ஹாசன் நடித்து கதை எழுதி கடந்த 1994ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மகாநதி. சந்தானபாரதி இயக்கிய இப்படத்தில் கமலுடன் இணைந்து சுகன்யா, எஸ்.என். லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இன்று வரை கமல் ஹாசன் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும் மகாநதி பிரபல ஹாலிவுட் படத்தின் காப்பி என கூறி தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஹாலிவுட்டில் 1979ஆம் ஆண்டு வெளிவந்த Hardcore எனும் படத்தை காப்பியடித்து தான் மகாநதி படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
படம் காப்பியா
1994ஆம் ஆண்டி வெளிவந்த மகாநதி படத்தில் ஹீரோவான கமல் தனது மகளை துளைத்துவிட்டு, பல இடங்களில் தேடி அலைவார். அப்போது ஒரு விபச்சார விடுதியில் தனது மகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைவார் கமல்.
அதே போல் தான் 1979ஆம் ஆண்டு வெளிவந்த Hardcore திரைப்படத்திலும் ஹீரோ தனது மகளை சிறு வயதில் துளைத்துவிடுகிறார். இதன்பின் தனது மகள் இளம் பருவத்தில் ஒரு ஆபாச படத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பின் அவரை கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வருவார்.
இரண்டும் ஒரே கதைகளாக இருக்கும் பச்சத்தில் தான் ரசிகர்கள் மகாநதி திரைப்படம் காப்பி என கூறி வருகிறார்கள்.
சமந்தா மீண்டும் லவ் பண்ணுங்க என கேட்ட ரசிகர்.. அவரது பதிலை பாருங்க