மாஸ்டர் நடிகை மாளவிகாவின் பிறந்தநாள் பார்ட்டியில் விஜய் சேதுபதி ! வெளியான மேலும் சிலரின் போட்டோஸ்
மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவிற்கு பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் அவர் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார்.
ஆனால் அவரின் இரண்டாவது திரைப்படத்திலே தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பேசப்பட்டார்.
கடைசியாக தனுஷுடன் மாறன் திரைப்படத்தில் நடித்திருந்தார், அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் இன்னும் அதிகமான வாய்ப்பு கிடைக்கவில்லை.
பிறந்தநாள் பார்ட்டி
இந்நிலையில் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதன்படி சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய மாளவிகா அவரின் பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதில் நடிகர் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகின.
மேலும் அவருடன் மற்ற சில பிரபலங்கள் உள்ள புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் மாளவிகா. இதோ அந்த போட்டோஸ்
கோடிக்கணக்கில் சம்பளம் ஈட்டும் நடிகை அலியா பட்