குட் நைட் மணிகண்டனின் அடுத்த படம்.. இயக்குனர் யார் தெரியுமா! லேட்டஸ்ட் அப்டேட்
மணிகண்டன்
தமிழ் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். இந்த தலைமுறை ரசிகர்களின் கவரும் வண்ணம் இவருடைய நடிப்பு இருக்கிறது.
விக்ரம் வேதா, காலா ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்த இவர், ஜெய் பீம் படத்தின் மூலம் சிறந்த நடிகர் என அனைவராலும் பாராட்டப்பட்டார்.
மேலும் குட் நைட் படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை மக்களிடையே ஏற்படுத்தியது. இந்த ஆண்டு வெளிவந்த லவ்வர் படமும் இளைஞர்களை கவர்ந்தது.
லேட்டஸ்ட் அப்டேட்
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முன்னேறி வரும் நடிகரான மணிகண்டன் அடுத்ததாக, இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவுடன் கைகோர்க்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர் தியாகராஜா குமாரராஜா. இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் படத்தில் ஹீரோவாக மணிகண்டன் நடிக்கிறார் என கூறப்படுகிறது.