ஜெயந்த் சவார்கர்
ஏராளமான மராத்தி மற்றும் ஹிந்தி சினிமாவில் நடித்து இருக்கும் பழம்பெரும் நடிகர் ஜெயந்த் சவார்கர் உடலநலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.
அவர் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இருந்து வருகிறார். சினிமா மட்டுமின்றி தியேட்டர், சின்னத்திரையிலும் அவர் நடித்து இருக்கிறார்.

மருத்துவமனையில் மரணம்
குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு தானேவில் ஒரு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார் ஜெயந்த் சவார்கர். நேற்று இரவு அவர் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இன்று காலை 11 மணிக்கு அவர் உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தெரிவித்து இருக்கின்றனர். ஜெயந்த் சவார்கர் உடலுக்கு இறுதி சடங்குகளாக நாளை நடைபெற இருக்கிறது.

சந்திரமுகி 2 படத்தின் முதல் விமர்சனம்! எப்படி இருக்கு? முழு படத்தையும் பார்த்த பிரபலம்