போடானு சொல்லிட்டு போயிறனும்.. கமல் படத்தை விமர்சித்த மாரி செல்வராஜ்.. எழும் கண்டனம்!
நடிகர் கதிர் நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் மாரி செல்வராஜ்.
இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் படம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் மாமன்னன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகின்ற ஜூன் 29 -ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் மாரி செல்வராஜ் கமலின் பாபநாசம் படம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அவர், " பாபநாசம் படம் தமிழ் நாட்டில் ஹிட் ஆச்சி. ஆனால் படத்தில் அப்பா அவரின் மகளிடம், உன்னை ஒருத்தன் வீடியோ எடுத்தா அவன் தான் வெட்கப்பட வேண்டும் என்று கூறமாட்டார்.
போலீசாரிடம் இருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என கமல் நடித்து சொல்லி கொடுப்பார். ஆனால் எங்கேயுமே ஒருவன் வீடியோ எடுத்து மிரட்டினால் போடா மயிருனு சொல்லி போய்க்கிட்டே இரு என்று சொல்லவே மாட்டார் எனப் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் மாரி செல்வராஜ் எதிராக கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ.
போடா மயிரு னு சொல்லி போய்க்கிட்டே இரு.... ?
— பிரபாகரன் ? (@PrabhaKaran_45) January 2, 2021
மாரி செல்வராஜ் ??? pic.twitter.com/HvtTH4A3Gs
அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட ஜோதிகா!.. நடித்திருந்த செம மாஸா இருந்திருக்குமே
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    