டாப்பில் இருந்த விஜய்யின் மாஸ்டர் பட சாதனையை பின்னுக்கு தள்ளிய விக்ரம்! மீண்டும் முதலிடத்தில் கமல்
மாஸ்டரை பின்னுக்கு தள்ளிய விக்ரம்
உலகநாயகன் கமலுடன் விஜய் சேதிபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.
பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அதன்படி தமிழகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக டாப்பில் இருந்த பாகுபலி வசூலை பின்னுக்கு தள்ளி தற்போது விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக திகழ்ந்து வருகிறது.
இதற்கிடையே தமிழகத்தில் மீண்டும் ஒரு முக்கிய சாதனையை படைத்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தான் தமிழகத்தில் ஷேர் எடுத்த திரைப்படமாக திகழ்ந்து வந்தது.
மேலும் தற்போது விக்ரம் திரைப்படம் அந்த சாதனையை முறியடித்து இருக்கிறது. ஆம், தற்போது விக்ரம் தான் தமிழகத்தில் அதிக ஷேர் எடுத்த திரைப்படமாக மாறியுள்ளது. மேலும் இன்னும் கூட இப்படம் பல இடங்களில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா 2 ஹீரோயின் பற்றி வந்த அப்டேட்! ஓரங்கட்டப்பட்ட ராஷ்மிகா?