மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்த விஷயம்.. என்ன செய்தார் தெரியமா
மாரி செல்வராஜின் மாமன்னன்
பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் எனும் இரு மாபெரும் படைப்புகளை கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாமன்னன்.
இன்று வெளிவரும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இதுவே உதயநிதியின் கடைசி திரைப்படம் என அவரே கூறியுள்ளார். இப்படத்தை பார்த்த தனுஷ், கமல் ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் படம் சிறப்பாக இருக்கிறது என தங்களது விமர்சனத்தை தெரிவித்தனர்.
முதல்வரின் செய்த விஷயம்
இந்நிலையில், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது மகன் நடித்த மாமன்னன் திரைப்படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜை கட்டித்தழுவி கொண்டாடியுள்ளார்.
இதை இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.
மாமன்னனை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் திரு . @mkstalin ஐயா அவர்களுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் ப்ரியத்தையும் சமர்பிக்கிறோம் ❤️❤️❤️ @Udhaystalin @arrahman @KeerthyOfficial @RedGiantMovies_ #MAAMANNAN ? pic.twitter.com/1snE2uBQeF
— Mari Selvaraj (@mari_selvaraj) June 29, 2023
இந்தியாவை விட்டு அமெரிக்கா பறக்கும் தொகுப்பாளினி மணிமேகலை- திடீரென ஏன், போட்டோ இதோ