அனிருத்-ம் இல்லை, ரகுமானும் இல்லை, கமலின் அடுத்த படத்தை கைபற்றிய இசையமைப்பாளார் ! இவர் தான்
கமலின் அடுத்த பட இசையமைப்பாளர்
உலகநாயகன் கமல் தனது விக்ரம் திரைப்படத்தின் முலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார், அவரின் திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வரலாறு காணாத வசூலை குவித்துள்ளது.
அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து கமல் இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கடைசியாக இயக்குநர் மகேஷ் நாராயணன் மலையாளத்தில் இயக்கிய மாலிக் திரைப்படம் பெரிய வெற்றியடைந்துள்ளது.

இதற்கிடையே இவர்கள் இருவரின் கூட்டணி எப்படி இருக்கும் என ரசிகர்கள் இப்போதே எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் கமல் ஏற்கனவே உருவாகியிருந்த கதையை தான் மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம் அதன்படி மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமாக உள்ள Sushin Shyam தான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய சல்மான் கான்! ஒரு வாரத்திற்கு இத்தனை கோடியா