'லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்'.. முக்கிய பிரபலம் வெளியிட்ட அறிக்கை
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
திரிஷா, கவுதம் மேனன், மிஸ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கிருந்து படக்குழுவினர் கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருந்தார்.
மிஸ்கின் அறிக்கை
இந்நிலையில், இயக்குனர் தன்னுடைய காட்சிகள் எடுத்து முடித்துவிட்டதாகவும் தனக்கு படப்பிடிப்பு நிறைவு பெற்றுவிட்டதாகவும் மிஸ்கின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் கூறியதாவது :
இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன்... மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது.
ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள். துணை இயக்குனர்களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார்.

என் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன்.
என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன்.
லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்.
#Leo #vijay #mysskin #lokeshkanagaraj @Dir_Lokesh pic.twitter.com/rcYXcoCRRK
— Mysskin (@DirectorMysskin) February 26, 2023
துணிவு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்.. தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபம் தெரியுமா
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri