விஜய்யின் 67வது படத்தில் நடிப்பதற்காக மிஷ்கினுக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா?
விஜய்யின் 67வது படம்
தமிழ் சினிமாவில் படத்துக்கு படம் ஒரு கேப் விடாமல் தொடர்ந்து படங்கள் நடித்து வருபவர் விஜய். இவரின் வாரிசு திரைப்படம் கடந்த வருட இறுதியில் தான் முடிவடைந்தது, படமும் ஜனவரி மாதம் வெளியானது.
படத்தை ரிலீஸ் செய்த கையோடு விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார்.
பூஜை போடும்போது எடுக்கப்பட்ட வீடியோ, படப்பிடிப்பு செல்லும் போது எடுத்த வீடியோ என தயாரிப்பு குழு வெளியிட ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

நடிகரின் சம்பளம்
இந்த படத்தில் விஜய் மற்றும் த்ரிஷா 14 வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளதால் ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளார்கள். அதோடு படத்தில் முக்கிய வேடத்தில் மிஷ்கின் நடிக்க இருக்கிறாராம்.
இப்படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு இவருக்கு ரூ. 10 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர்கள் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக வெளியான போட்டோ