எனது உதவி இயக்குநர்களை மது அருந்த சொல்வேன்! - மேடையில் இயக்குநர் மிஷ்கின் பேசிய விஷயம்
இயக்குநர் மிஷ்கின்
இயக்குநர் மிஷ்கின் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின்.
இவர் இயக்கத்தில் அடுத்து பிசாசு 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் மிஷ்கினின் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளவர். இயக்குநர் ஸ்ரீ கனேஷ் இவர் இயக்கத்தில் வெளியான 8 தோட்டக்கள் திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்து இருக்கிறது.

குருதி ஆட்டம்
அப்படத்தை தொடர்ந்து நடிகர் அதர்வாவை வைத்து அவர் இயக்கியுள்ள திரைப்படம் குருதி ஆட்டம். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இன்று இப்படத்தின் விழா நடந்துள்ள நிலையில் அதில் கலந்து கொண்டு பேசியுள்ளார் இயக்குநர் மிஷ்கின். அதில் “தனது உதவி இயக்குநர்களை எனது ஆபிஸ்-க்கு வந்தவுடன் முதலில் மது அருந்த தான் சொல்லி தருவேன்.
அதை குடித்துவிட்டு உளறு, மனதில் இருப்பதை பேசு, என்னை அடி, ஆனால் என்னிடம் உண்மையாக இருக்க வேண்டும். மேலும் எனது எந்த ஒரு உதவி இயக்குநர் நல்ல திரைப்படம் இயக்கவில்லையோ, அவன் என் உதவியாளரே கிடையாது” என பேசியிருக்கிறார்.

பாதியிலே கைவிடப்பட்ட தனுஷின் முக்கிய திரைப்படங்கள்