விஜய்யின் படத்தில் நடித்துள்ள மிஸ்கின்..அதுவும் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் தெரியுமா
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைக்கு வரவிருக்கிறது.
இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67ல் விஜய் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வாரிசு படத்தின் ரிலீசுக்கு பின் வெளியாகும் என லோகேஷ் கூறியுள்ளார்.

விஜய்யின் திரைப்பயணத்தில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட படங்களில் ஒன்று யூத். கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை வின்சென்ட் செல்வா இயக்கியிருந்தார்.
மிஸ்கின் நடித்த காட்சி
இப்படத்தில் தான் இயக்குனர் வின்சென்ட் செல்வாவின் துணை இயக்குனராக மிஸ்கின் பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில், யூத் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் அப்படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த மிஸ்கின் நடித்துள்ளார். அந்த காட்சியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..