நடிகர் கமல்ஹாசனுடன் இதுவரை நடிக்காதது ஏன்?- முதன்முறையாக கூறிய நதியா
நடிகை நதியா
வயது ஆக ஆக இளமை கூடி ரசிகர்களின் கண்களுக்கு இளமையாக காணப்படும் ஒரு நடிகை நதியா. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சரீனா அனூஷா என்கிற நதியா.
80, 90 காலகட்டத்தில் டாப் நாயகியாக வலம் வந்த இவர் 2004ம் ஆண்டு முதல் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நதியாவின் கண்ணியமான தோற்றம், துடிப்பான நடிப்பு, நவநாகரிக உடைகள், ஹேர் ஸ்டைல் என அனைத்தும் ரசிகைகளை கூட சம்பாதிக்க ஒரு விஷயமாக இருந்தது.
1988ம் ஆண்டு மராட்டியரான சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்து இரண்டு பெண் குழந்தைகளை பெற்றுள்ளார்.
கமலுடன் நடிக்காதது
அண்மையில் ஒரு பேட்டியில் இதுவரை கமல்ஹாசனுடன் நடிக்காதது ஏன் என்பது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், கமல்ஹாசனுடன் நான் நடிக்காமல் போனது எனக்கு வருத்தமாக தான் உள்ளது.
அதற்கு ஒரே ஒரு காரணம் தான், கால்ஷீட் பிரச்சனை, அவர் பட வாய்ப்பு வரும்போது வேறொரு படங்களில் இருப்பேன். விக்ரம் படத்தில் கூட முதலில் நான் தான் நடிப்பதாக இருந்தது என கூறியுள்ளார்.
பழம்பெரும் பிரபல காமெடி நடிகர் சந்திரபாபுவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?- இப்படியொரு வாழ்க்கையா அவருக்கு?

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
