கோலாகலமாக முடிந்த திருமணம்.. நாக சைதன்யா - சோபிதா ஹனிமூனுக்கு எங்கு செல்கின்றனர் தெரியுமா
நாக சைதன்யா - சோபிதா
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
நடிகை சமந்தா உடனான விவாகரத்துக்கு பின், நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதாவுடன் காதலில் இருக்கிறார், இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள் என தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டது.
இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதன் பின், தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து கடந்த 4 - ம் தேதி நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த கையோடு இருவரும் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
தற்போது, நாக சைதன்யா மற்றும் சோபிதா ஜோடி தங்கள் ஹனிமூனுக்கு எங்கு செல்ல உள்ளார்கள் என்ற கேள்வி எழுந்தது.
ஹனிமூன்
இந்நிலையில், முன்பு பேட்டி ஒன்றில் சோபிதா அவருக்கு ஹனிமூனுக்கு ஐஸ்லாந்துக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, இருவரும் அங்கு செல்ல வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.