மனைவி நயன்தாராவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு !
விக்னேஷ் சிவன் - நயன்தாரா
தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.
சில வாரங்களுக்கு முன் வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொண்ட தங்களுடைய இரட்டை குழந்தைகளை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

இது சர்ச்சையில் சிக்க, அதன்பின் தற்போது அதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆம், தங்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு பதிவு திருமணம் நடைபெற்றது என்று ஆதரங்களை சமர்பித்தவுடன் இந்த சர்ச்சைக்கு முடிவு வந்துள்ளது.
இந்நிலையில் இன்று நயன்தாரா தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிறந்தநாள் தெரிவித்து ஒரு நீண்ட பதிவை வெளியிட்டு இருக்கிறார் விக்னேஷ் சிவன்.
மிகவும் சிம்பிளாக தயாரிக்கப்பட்ட கௌதம் கார்த்திக், மஞ்சிமா திருமண பத்திரிக்கை-