விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதல் தொடங்கியது இங்கிருந்து தான் போல! வைரலாகும் வீடியோ

By Jeeva Oct 22, 2022 09:30 PM GMT
Report

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.

பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த ஜுன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். மிகவும் அடம்பரமாக நடந்த இவர்களின் திருமணத்தில் சினிமா துறையை சேர்ந்த பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் தான் இவர்கள் இருவரும் வாடகை தாயின் மூலம் இரட்டை குழந்தை பெற்று கொண்டதாக அறிவித்து இருந்தனர். பின்னர் இது குறித்த பல சர்ச்சை தொடர்ந்து வெடித்தன.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதல் தொடங்கியது இங்கிருந்து தான் போல! வைரலாகும் வீடியோ | Nayanthara And Vignesh Shivan Nrt Movie

மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தரப்பில் தங்கள் இருவருக்கும் சில வருடங்கள் முன்பே பதிவு திருமணம் செய்பட்டதாக அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருந்து வரும் விக்னேஷ் சிவன், 7 வருடங்களுக்கு முன் வெளிவந்த நானும் ரௌடி தான் திரைப்பட ஷூட்டிங் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.

“இந்த படம், இந்த வேலை எனக்கு அனைத்தையும் தந்தது, எப்போதும் தனுஷ் சாருக்கு நன்றி” என பதிவிட்டு இருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்த படத்தில் இருந்து தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார் ஜி.பி.முத்து! பலபேரின் நம்பிக்கை உடைந்தது

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US