இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்து, இரட்டை குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்தாரா.. வீடியோ இதோ
நயன்தாரா
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது ஜவான் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா 75 மற்றும் டெஸ்ட் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இதன்பின், வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார்.
அவ்வப்போது நயன்தாரா தன்னுடைய மகன்களுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகும். அதை விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியிடுவார்.
இன்ஸ்டாகிராம்
ஆனால், இனிமேல் நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தான் அந்த புகைப்படங்கள் எல்லாம் வெளிவரப்போகிறது. ஆம், நடிகை நயன்தாரா முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார்.
ரஜினியின் ஜெயிலர் படம் பிஜிஎம் போட்டு தனது இரட்டை மகன்களுடன் மாஸ் என்ட்ரி கொடுக்கும் வீடியோவை நயன் தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். மேலும் முதல் முறையாக தன்னுடைய மகன்களின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். இதோ அந்த வீடியோ..
நடிகர் நரேனின் மனைவி, மகள், மகனை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
