தென்னிந்திய திரையுலகில் எவரும் வாங்காத சம்பளத்தை தனது அடுத்த படத்திற்காக வாங்கவுள்ள நயன்தாரா!
நயன்தாரா
தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் புகழை பெற்றவர் நடிகை நயன்தாரா.
இவர் விரைவில் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமாக இருக்கிறார், அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அப்படத்தை தொடர்ந்து நயன்தாரா அவரின் 75-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ள அப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது.

சம்பளம்
இதற்கிடையே தற்போது அப்படத்திற்காக நடிகை நயன்தாரா வாங்கவுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆம், அப்படத்திற்காக நயன்தாராவிற்கு ரூ. 10 கோடியை சம்பளமாக பெற இருக்கிறாராம்.
பாலிவுட் திரையுலகில் நடிகைகள் தீபிகா படுகோன் மற்றும் அலியா பட் மட்டுமே 10 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வந்த நிலையில் தற்போது தென்னிந்தியாவில் முதல்முறையாக நடிகை நயன்தாரா தான் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக பெற இருக்கிறார்.

சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தை தவறவிட்ட நடிகை பூஜா ஹெக்டே
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
18 வயதுக்கு மேற்பட்டோர் சேர்ந்து வாழலாம்; லிவ்-இன் உறவுக்குத் தடையில்லை - உயர்நீதிமன்றம் IBC Tamilnadu