துளி கூட மேக்கப் இல்லாமல் பொது இடத்திற்கு வந்த நயன்தாரா.. சிம்பிள் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க
நயன்தாரா
இந்தியளவில் பிரபலமான தமிழ் நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர் ஒரு புறம் ஜவான், இறைவன், நயந்தாரா 75 ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
மறுபுறம் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். நயன்தாராவின் நடிப்பில் அடுத்ததாக மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜவான்.
ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் நயன்தாரா.
துளி கூட மேக்கப் இல்லாமல்
இந்நிலையில், நடிகை நயன்தாரா தற்போது மும்பைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
துளி கூட மேக்கப் போடாமல் பொது இடத்திற்கு வந்துள்ள நயன்தாராவின் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ஜவான் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளுக்காக தான் நயன்தாரா மும்பை சென்றுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..
தனது மகன்களுடன் அஜித் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்த நடிகை அம்பிகா- இதுவரை பார்த்திராத ஒன்று