அந்தமாதிரி காட்சியில் நடிக்க மாட்டேன்.. நிறைய படம் reject பண்ணிருக்கேன்..நிவேதா பெத்துராஜ் ஓபன் டாக்
நிவேதா பெத்துராஜ்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார்.
ஓபன் டாக்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நிவேதா பெத்துராஜ் இடம் தொகுப்பாளர், கிளாமர் காட்சிகளில் நடிப்பதை குறித்து கேள்வி கேட்டார்.
அதற்கு பதில் அளித்த அவர், நான் ஹோம்லி கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வந்தேன். தெலுங்கில் ஒரு படத்தில் மட்டும் கிளாமராக நடித்தேன். ஆனால் அதை பார்த்துவிட்டு வீட்டில் ஒன்னும் சொல்ல வில்லை.
அவர்கள் புரிந்து கொண்டார்கள், ஏதும் என்னிடம் சொல்லவில்லை. படு கவர்ச்சியான ரோலில் நடித்து வீட்டில் இருப்பவர்களை முகம் சுளிக்கும் வகையில் இருக்க கூடாது. ஓவர் கிளாமரான காட்சி இருந்தால் அதில் நடிக்க மாட்டேன். இதனால் பல பட வாய்புகளை நிராகரித்து இருக்கிறேன் என்று நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.
சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல் நாயகிகளின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
