இயக்குனர் அட்லீயின் நிறத்தை கேலி செய்த புகைப்பட கலைஞர்- வைரலாகும் வீடியோ
இயக்குனர் அட்லீ
தமிழ் சினிமாவில் நுழைந்த சில வருடங்களிலேயே மிகவும் ஹிட்டான படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர்களுக்கு இணையாக வளர்ந்தவர் அட்லீ.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லீ முதல் படத்தின் வெற்றியிலேயே தளபதியை ரசிக்க வைத்து அவரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார்.
தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ள அட்லீ, ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு அவ்வப்போது இடைவேளை விடப்பட்டு நடந்து வருகிறது.

புகைப்பட கலைஞர் கமெண்ட்
அண்மையில் மும்பை விமான நிலையத்திற்கு ஷாருக்கான் மற்றும் அட்லீ வந்திருந்தனர். அப்போது அட்லீயை ஒரு வட இந்திய புகைப்பட கலைஞர் அவரை பார்த்து இட்லி சார், இட்லி சார் என்று அழைத்தனர்.
அதிலும் ஒரு புகைப்பட கலைஞர் இவ்ளோ கருப்பா இருக்கான் தெரியவே இல்ல என கமெண்ட் செய்ய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொகுப்பாளினி பிரியங்காவா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க- அடடா வெட்கம் எல்லாம் படுறாரே?