பொன்னியின் செல்வன் படத்தின் முதல் Review-யை அளித்த இயக்குனர் சுதா கொங்கரா !
எதிர்பார்ப்பில் பொன்னியின் செல்வன்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தை PS 1 மற்றும் PS 2 என இரண்டு பாகங்களாக வெளியிடவுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டர்களையும் சமீபத்தில் வெளியிட்டு இருந்தனர்.
தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்றுகூடி நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.
தெலுங்கு, கன்னடம் என பான் இந்தியா அளவில் ஹிட் கொடுத்து வருவதால், தற்போது செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள PS-1 திரைப்படம் அந்தளவிற்கு வரவேற்பை பெருமா எதிர்நோக்கியுள்ளனர்.

முதல் விமர்சனம்
இந்நிலையில் தற்போது முக்கிய இயக்குனர் சுதா கொங்கரா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் இப்படம் குறித்து பேசியுள்ளார். அதில் பொன்னியின் செல்வன் படம் பிளாக் பஸ்டராக இருக்கும், படம் பார்த்தவர்கள் அனைவரும் அற்புதமாக உள்ளது என சொல்லுகிறார்கள்.
நான் இன்னும் படம் பார்க்கவில்லை பாக்கணும்" என கூறியுள்ளார். மேலும் சுதா கொங்கரா இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் முதல் நாளை விட 10-வது நாளில் அதிகமாக வசூல் செய்த KGF 2 !